காமுகனை வென்ற பெண்ணாள்
ஊருக்குள் அழகன் அவன்
அவன் உள்ளத்தை யாரிவார்
உறவுகளுக்கோ உத்தமனாம்
உள்ளதெல்லாம் யாரிவார்
அழகான பெண்ணைக் கண்டால்
ஆளைப் பிடிக்கத் தேவையில்லை
அத்தனை பெருமை சொல்வான் அவளிடம் அவனைப்பற்றி
இளமைக் காலமதில் எத்தனை பெண்ணை ஏமாற்றிக் கைகழுவி விட்டான்
உற்ற நண்பரெல்லாம் ஒதுங்கியே ஓடிடுவார்
பெண்ணிலே பேராசை கொண்டவன் வலையில்
சிக்கித் தவித்தாள் சின்னபெண் அவளோ ஏழை
பேதையை ஏமாற்றிய பாதகன்
பல பெண்களின் கணவன் என்றவள் அறிந்ததும் அலறித்துடித்தவள்
அதற்கொரு முடிவும் கொண்டாள்
நான்கு சுவருக்குள் அவன் போட்ட நாடகந்தனை நாட்டுமக்கள் விளங்கிட அதை அரங்கேற்ற எண்ணம் கொண்டாள் பெண்களை ஏமாற்றும் பித்தர்கள் கொட்டம் அடக்க பெண்ணவள் புறப்பட்டாள் வெற்றியுடன் வீருநடை கண்டாள்