எனக்குள் நீ

என் பெயரைக் கூப்பிடும் போது
என் தலை திரும்புகிறது
உன் பெயரைக் கூப்பிடும் போது
என் இதயம் திரும்புகிறது
நீ தரையில் நடப்பது
ஊருக்குத் தெரியும்
என் மனதில் நடப்பது
யாருக்குத் தெரியும்
என்னை உண்ணத்தான் உதடுகள் திறக்கவில்லை
உமிழக்கூடவா முடியவில்லை?
தொலைந்த நான் கிடைத்தேன்
உன் விழிகளால்
என் விழிகளில்
உன்னைத் தேடினாயே
அப்போது........

எழுதியவர் : அஸ்லா அலி (5-Sep-19, 11:06 am)
சேர்த்தது : அஸ்லா அலி
Tanglish : enakkul nee
பார்வை : 363

மேலே