கொஞ்சிடும் இந்தயிடைவேளை விடைபெறுமுன்
மஞ்சளாடை போர்த்திய மாலை இளவேளை
ஆரஞ்சு வண்ணத்தில் ஓவியமாய் ஆதவன்
கொஞ்சிடும் இந்தயிடை வேளை விடைபெறுமுன்
கொஞ்சம் ரசிக்கநீயும் வா !
-----பல விகற்ப இன்னிசை
மஞ்சளாடை போர்த்திய மாலை இளவேளை
ஆரஞ்சு வண்ணத்தில் ஓவியமாய் ஆதவன்
கொஞ்சிடும் இந்தயிடை வேளை விடைபெறுமுன்
கொஞ்சம் ரசிக்கநீயும் வாஎன் பிரியசகி
கொஞ்சிடுவோம் நாமும் மகிழ்ந்து .
----பல விகற்ப பஃறொடை
மஞ்சளாடை போர்த்திய மாலை இளவேளை
விஞ்சிடும் வண்ணத்தில் ஓவியமாய் ஆதவன்
கொஞ்சிடும் இந்தயிடை வேளை விடைபெறுமுன்
கொஞ்சம் ரசிக்கநீயும் வா !
----ஒரு விகற்ப இன்னிசை
மஞ்சளாடை போர்த்திய மாலை இளவேளை
விஞ்சிடும் வண்ணத்தில் ஆதவன் - நெஞ்சுதொடும்
கொஞ்சிடும் இந்தயிடை வேளை விடைபெறுமுன்
கொஞ்சம் ரசிக்கநீயும் வா !
----ஒரு விகற்ப நேரிசை
மஞ்சளாடை போர்த்திய மாலை இளவேளை
விஞ்சிடும் வண்ணத்தில் ஓவியமாய் ஆதவன்
கொஞ்சிடும் இந்தயிடை வேளை விடைபெறுமுன்
கொஞ்சம் ரசிக்கநீயும் வாஎன் பிரியசகி
கொஞ்சிடுவோம் நாமும் மகிழ்ந்து .
----ஒரு விகற்ப பஃறொடை
என வெண்பாக்கள் ; தொல்காப்பியர் மகிழ்வார்