பூவை சொல்லும் சேதி என்ன
வார்த்தைகள் இல்லையடி கண்ணம்மா - உந்தன்
பேரழகை நான் வர்ணிக்க - காதல்
நீரூற்றினைப் போலவே பொங்கிடும் - எந்தன்
நெஞ்சம் உன்னையே கொஞ்சிடும் - உன்னை
சுற்றி சுற்றி வருவேன் - நாம்
சொந்தம் கொள்ளும் வரையிலும் - உன்னைப்
பார்த்து இருந்தால் போதுமே - நான்
பசி தூக்கம் அனைத்தையும் மறந்திடுவேன்
காத்து இருக்கிறேன் கண்ணம்மா - உந்தன்
காதலை சொல்வது எப்போது? - என்
இதயத்தில் உன்னை வைத்து இருக்கிறேன்
என்றும் நானுன்னையே நினைக்கிறேன் - இங்கு
எத்தனை பெண்கள் வழியில் போனாலும்
என்னுயிர் உன்னைத் தான் விரும்புதே
பூத்து இருக்கும் விழிகளுடன் இந்தப்
பூவை சொல்லும் சேதி என்ன?
ஆக்கம்:- வேல்பாண்டியன் கோபால்