மானத்தி அவள் தமிழச்சி-----படித்தது
1
மண்ணின்
விடுதலைக்குப் போராடிய
தமிழச்சியின் நிர்வாணம்
இணையமெங்கும் ஒளிபரப்பு;
உயிரிருந்தும் உலவும் நாம் -
அதை கண்டும் -
சாகாத; இழி பிறப்பு!!
————————————————————–
2
மானத்தில் -
தொட்டால் சுடும் நெருப்பு,
இழிவாய் -
பார்த்தாலே பாயும் மின்சாரம்,
அவள் -
தாயிற்கும் ஒரு படி மேல் என்று
இனி புரியும் – சிங்களனுக்கு!!
————————————————————–
3
அவளுக்கு மட்டும்
தெரிந்திருந்தால்
ஒன்று பார்த்தவரையெல்லாம்
எரித்திருப்பாள்,
அல்லது – தன்னையாவது
எரித்துக் கொண்டிருப்பாள்!!
————————————————————–
4
தப்பித் தவறி
அவள் பிள்ளை இதை
பார்த்திருந்தால்-
எத்தனை ராஜபக்ஷேவை அவன்
கொன்றிருப்பானோ!!!!!!!?
————————————————————–
5
எம் மண்ணின்; வீரமென்
தமிழச்சிகள்,
நாய்கள் கொன்றுவிட்டு தான்
கொந்தியிருக்கின்றன!!
————————————————————–
6
ஜென்மம்
எத்தனை எடுத்தாலும் இனி
ரத்தத்தின் ஒரு துளியிலாவது
இருக்கும் -
அவன் மீதான; அவளின் கோபம்!
————————————————————–
7
யாரும் சாட்சிக்கு வேண்டாம்
காற்றும்.. வெளிச்சமும்..
மண்ணும்.. வானும்..
மரமும் செடிகளும் -
பார்த்துக் கொண்டு தானிருந்தன
அந்தக் கயவர்களை!!
————————————————————–
8
கடல் தகதகவெனக்
கொதித்து -
உலகத்தை சூழ்ந்து அழித்திருக்கும்;
அந்த கொடுமைக்கு உடனே
தண்டனை கொடுப்பதெனில்!!
————————————————————–
9
யாரோ ஒருவனுக்கு
துணிவிருந்தால்
அவள் கையில் ஒரு அரிவாளை
கொடுத்துவிட்டு சொல் -
உன்னை இப்படிச் செய்வேனென்று;
அந்த அரிவாளில் -
உன்னைப் போல் – அவள்
நூறு பேரை அறுத்திருப்பாள்!!
————————————————————–
10
எனக்கு
மரணத்தை இப்பொழுதேக் கொடு;
அதற்கு ஈடாக -
இணையத்தில் தெரிந்த
என் தமிழச்சியின் வெற்றுடம்பை
ஈழ விடுதலையால் போற்று,
இன்னொரு மானத்தி மிஞ்சட்டும்!!
————————————————————–
வித்யாசாகர்
ஈழத்தமிழர் இதயங்களில் இமயமானவள் நீ வாழ்ந்த போதும் இனத்திற்கு வளங்கள் செய்தவள் நீ வாழ்வு முடியும் போதும் முடிந்த போதும் காவியமானவள் நீ இறந்த பின்னும் இனத்திற்கு இனிதே செய்தவள் நீ உன் உருவம் கண்ட உலகிற்கெமது உரிமை சொன்னவள் நீ நெஞ்சை உருக வைத்தவள் நீ கலக்கமில்லா எண்ணம் கொண்ட ஓவிய பெண் அவள் நீ இழக்க முடியா இழப்பை எல்லாம் எமக்காய் இழந்தவள் நீ உடைந்து உருகி உணர்வைப் பிழிந்து நன்றி கூறுகின்றோம் நன்றி என்ற வார்த்தை மட்டும் நன்று இல்லையடி உலகில் இறைவன் என்றொருவன் எமக்கு வேண்டுமென்றால் உன் உருவம் அன்றி வேறெதையும் எம் இனம் கொண்டிடுமோ? முடிந்து விழுந்து மடிந்த பின்னும் உன் காலடி நாம் தொழுவோம்! இந்த உலகம் இருக்கும் இறுதிக்கணமும் உன் பெயர் நாம் மறவோம் தமிழ் அன்னை உன் வடிவே என்று கொண்டுனை அம்மா என்றிடுவோம் தமிழ் அன்னை நீ என்றிடுவோம்!
தமிழா இனிமேலாவது விழித்தெழு !!!
எனக்கும் ஒரு வாய்ப்பு கொடு கடவுளே , அந்த சிங்களனை சுட்டுரிக்க
தமிழா! தமிழன் அதிகாரத்தில் இருத்தும் என் சகோதரிய காப்பாற்றவில்லை ஏன் தான் தன் குடும்பம் அதிகாரத்தில் இருக்க வேண்டும்
நக்கீரனுக்கு கோடான கோடி நன்றிகள். நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே- ஈழ மகன்
சிங்களவன் என் மகள் இசைப்ப்ரியாவை நிர்மானமாக்கவில்லை முழு தமிழினத்தை நிர்வாணமாக்கினான்.தன தாயின் வேசித்தனத்தை ஒளிந்திருந்து ரசிக்கும் சிங்கள அவப்பிரப்பு என் மகல் இசைப்ரியாவை நிர்வானமாக்கில்லை அவள் உயிரற்ற உடலை நிர்வாணப்படுத்தினான்.அவள் உடலில் உயிர் இருந்திருந்தால் அங்கு இருந்தவர்களின் உடல்களில் உயிர் இருந்திருக்காது.நான் இங்கு இசைப்ப்ரியாவை காணவில்லை இந்த நிலைக்கு துணை போன ஈனப்பிறப்பு தமிழனின் மகளை காணுகிறேன்.
இந்த தருணத்தில் இசைப்ரியா வை எமது உடன்பிறப்பாக கருதுகிறேன் பாலா
இனியாவது திருந்து தமிழனமே சாதி மதம் கட்சி என்ற பாகுபாடு இல்லாமல் இறந்தவள் நம் தமிழச்சி ஒரு பெண் என்று பார்த்து திருந்து தமிழா மானமுள்ள தமிழன் கார்த்திக்

