கொஞ்சும் காதலில் கொல்லும் காமம்

காதல் ஆட்கொண்ட கதவுகளெல்லாம் இருள்கலைய இணைபிரியும் வேளை
சாதல் துறந்த தேவாரமும் மாநகர்வீதியில் இசைக்கும் அதிகாலை...
சொல்லிசை ஜதிகேட்டு சொக்கனும் சொக்கித் துயில
மெல்லிசை துதிகேட்டு மெல்லிடையாளும் அசைந்து எழ...
விடிவெள்ளியாய் விரைந்துவந்து பால்வெளியை அவளும் ஒளிர்வூட்ட
கடிவாள கட்டுப்பாட்டை கார்பரியாய் நானும் கலைத்துவிட...
கழுகு களைப்பாற விழுது இசைபாட
அழுது சளைக்காமல் தொழுது இடர்கலைய...
எருதும் அசைபோடும் கருது விருந்தாக
எருக்கும் வசைபாடும் மருந்தும் கரும்பாக...
கொடிமுல்லை மடல்விரிய கொம்புத்தேன் சுவையேற
மடிதன்னில் மயங்கினாள் மன்மதன் வீசிய மாயவலையில்...
கள்ததும்பும் வில்புருவம் விலக்காமல் விளக்கேற்ற
கள்ளனொன்றும் நானல்ல காப்பியத்தில் காதல்மட்டும் தொலைந்துபோக...
( ஆடிப் பட்டம் தேடி விதை )