கண்ணீர்

வெப்பம் கொண்ட
என் கைகளை
தன்மைப்படுத்த
வியர்வை கொண்ட
உன் கைகள்
கிடைக்காமல் நான்..!
வறண்டு போன
என் கன்னக்குழிகளில்
வண்ணம் பூசும்
உன் வார்த்தைகள்
கிடைக்காமல் நான்..!
உறக்கமில்லா
என் கண்களுக்கு
மயக்கம் தரும்
உன் மடிச்சுகம்
கிடைக்காமல் நான்..!
காய்த்துப்போன
என் விரல்களை
தேய்த்துப் போகும்
உன் கருஞ்சிகை
கிடைக்காமல் நான்..!
என்னை மட்டும்
சுடாச் சூரியனே
உன்னை வந்து
சேரும் நாட்களை
எண்ணி எண்ணி
கணிதம் நானும்
கற்கின்றேன்..!
உடன் சிறிது
கண்ணீரும்
சிந்துகின்றேன்..!!
செ.மணி