குளவி
என்னுடைய மெல்லிய
அமர்வில்
ஒரு வக்கிரம்
விரிகிறது..............
அண்மையில்
என் நாடியில் விட்டுப் போன
நொடிகள்
திரவம் நிரப்பி துடிக்கிறது.
அழுகிய சதையில்
முளைத்த ஓர் மயிர்
உயிரின்
நாசியில் நஞ்சாய் நெளிகிறது
மூளை ஓட்டின்
வெளியே புறங்கை
நீட்டும்
புழுக்கள் புற்றாய் வளர்கிறது
அடுக்கடுக்காய் நீட்டிய
கூர் பற்கள்
கழறும்
உவமைகள் பொய்யை சுடுகிறது
இதெல்லாம் வேண்டாமென
மாய்த்துக்கொண்ட
உயிர்
குழவியாய்
பிறக்கிறது ...

