பொறுக்கிய எழுத்துக்கள்
சில
எழுத முடியாத
எழுத்துக்களை
கொஞ்சம் பொறுக்கி
பார்க்கிறேன்
'ழ ' எழுத்து
பாச ழகரமாய்
தாய் வடித்த காஞ்சியில்
பாசம் பொங்க
குலையாமல் இருந்தது
'ற' எழுத்து
முறைத்து மிரட்டும்
தந்தையின் குரல்
செய்வினையாய்
என் வாழ்வை கட்டமைத்தது
'ச' எழுத்து
மெய் பயிராய்
சகோதிரன் வித்திடும்
விதையில்
என்னை பலமுறை துளிர்விட செய்தது
'ம' எழுத்து
வலிமையான மெல்லினமாய்
மனையிவின் அரவணைப்பில்
வீழ்ச்சிகள்
என்னை மறுஎழுச்சி செய்திட்டது
இப்படி
இன்னும்
சில
எழுத முடியாத
எழுத்துக்களை
கொஞ்சம் பொறுக்கி
பார்க்கிறேன்

