இப்படியும் இருக்கலாம்

ஏதோ ஒரு வார்த்தை முள்
எடுக்க முடியாமல்
நெஞ்சுக்குள் வசமாய்
சிக்கிக் கொண்டிருக்கலாம்

ஏதோ ஒரு தீ நாக்கு
எதிர்பாரா தருணத்தில்
சுட்டுவிட்டிருக்கலாம்

மௌனம் அறைந்து
பூட்டிய கதவுக்குள்
ஒரு
காயம் பட்ட இதயம்
ஒளிந்துகொண்டிருக்கலாம்

தவறான புரிதலில்
குழம்பிய மனசுக்கு
ஒர் ஆறுதல் முத்தமோ
இதமான அணைப்போ
தேவையாயிருக்கலாம் !

@இளவெண்மணியன்

எழுதியவர் : இளவெண்மணியன் (13-Aug-17, 2:18 pm)
சேர்த்தது : இளவெண்மணியன்
பார்வை : 248

மேலே