உதிரும் பூக்களாகிய மனிதர்கள்

உதிரும் பூக்களாய் இருக்கும் மனிதர்களுக்கேனிந்த அகந்தை?
அழுக்காறு??

ஏதோ மூவாயிரம் ஆண்டுகள் வாழ்பவர்கள் போல் இவர்களின் நடவடிக்கைகள்..
யுத்த ஆயத்தங்கள்...
அதிகார அருவருப்புகள்...

ஓலமிடும் நரிகளைவிட மிகவும் புத்தி நாசமடைந்த மனிதர்கள்...
புத்தி நாசத்தாலே உடல்பலம் அழிந்து புற ஆயுதங்களை நாடும் கோழைகள்...

சகோதரனுக்கு குடிதண்ணீர் கூட கொடுக்காத பாவிகளாய் வாழ்க்கை விரயம் செய்யும் வீணர்களாய் கொடுங்கோலர்களாய் பதவி, அதிகாரம், பணமென பித்துப்பிடித்து வாழும் உலகமே போர்க்கோலம் கொள்ள சுவாசக்காற்றினில் கொடும்நஞ்சு பாய்ச்சிடவே நம்பிக்கையற்ற வாழ்க்கையில் உறவினர்களும் பகைவர்களாய்,
காதலை துரோகிக்கும் காதலர்களாய்,
நட்பை விரோதிக்கும் நண்பர்களாய்,
சமத்துவத்தை அழிக்கும் சகோதரர்களாய்,
அன்பைக் கொன்ற அன்பர்களாய்,
அறிவை இழந்த அறிஞர்களாய்,
ஞானம் இல்லாத ஞானிகளாய்,
பேரழிவின் வழிகாட்டிகளாய் வீற்றிருக்கும் ஆட்சி, அரசாங்க, அதிகார பதர்களென்ற முன்னோடிகளாய் கொண்டு மனித சமுதாயம் முழுவதும் மிருக வெறியாட்டம் நிறைந்திருப்பது காட்டும் நடைமுறை வாழ்க்கை...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (13-Aug-17, 3:28 pm)
பார்வை : 567

மேலே