ஶ்ரீ கிருஷ்ண ஜெயந்தி

ஶ்ரீ கிருஷ்ண ஜெயந்தி..!
=====================
வெண்ணெய் திருடிய
..........வண்ணமே இருப்பான்
பெண்கள் கோபியரின்
..........கண்களெப்போதும் தேடும்
எங்கள் கண்ணன் அல்லவோ
கருணையிலாக் கஞ்சனைத்தன்
..........கரம்கொண்டே கொன்றவன்
சிசுபாலன் கொட்டமடக்கிய
..........பசுகாத்த பரமனவன்
எங்கள் கண்ணன் அல்லவோ
கேசியின் வாயில்கை
..........நுழைத்து மூச்சடக்கி
பேசமுடியாமல் செய்து
..........கேசவனெனப் பெயரானதும்
எங்கள் கண்ணன் அல்லவோ
கடம்ப மரத்திலேறிக்குதித்து
..........காளிங்கனின் கர்வமடக்கி
படமெடுத்தாடிய நூறுதலையில்
..........நர்த்தனமாடி நற்கதிகொடுத்தவனும்
எங்கள் கண்ணன் அல்லவோ
குழலிசையால் ஆநிரைகள்
..........குதூகலம் அடைந்ததும்
குன்றமேந்தி குடிமக்கள்
..........குறைத்தீர்த்துக் காத்ததுவும்
எங்கள் கண்ணன் அல்லவோ
கம்சனின் பணிப்பெண்
..........கூனிக்கிழவியின் கூனைநிமிற்றி
அம்சமான பெண்ணாக்கி
..........அடைக்கலம் கொடுத்ததும்
எங்கள் கண்ணன் அல்லவோ
கழுதையுருவம் கொண்டவனை
..........காலைப்பிடித்துத் தூக்கிவீழி
கழுமரமேற்றிக் கொன்றவனும்
..........தாளவனத்துக்கு தஞ்சமளித்தவனும்
எங்கள் கண்ணன் அல்லவோ
வெண்ணையுண்ட கோவலனே
..........கோபியர்கொஞ்சும் நாயகனே
அருச்சுனனின் அன்பனே
..........குசேலனுக்குற்ற நல்நண்பனே
எல்லாமெங்கள் கண்ணன் அல்லவோ
வசுதேவர் தேவகியின்
..........வயிற்றில் வந்துதித்த
பசுகாக்கும் தேவனவன்
..........புகழையின்று பாடுங்கள்..!
============================
நன்றி :: கூகிள் இமேஜ்