காசே தான் கடவுளடா
கவி பாடும் அனுபவம் இல்லை
கருதியதை கிறுக்கி கவிஞன் ஆனான்
தாய் மொழியின் மீது பற்றேதும் இல்லை
வருவதை பேசி மேதாவி ஆனான்
தனித் திறமை என்றேதும் இல்லை
தந்தையை காட்டி தலைவன் ஆனான்
பள்ளி பக்கம் ஒதுங்கியதும் இல்லை
கல்லூரி கட்டி அறிஞன் ஆனான்
காசு மட்டும் இருந்தால் போதும்
யாவரும் இங்கே யாதும் ஆவர்
திறமை உள்ள ஏழை அவனின்
வாழ்வை பறித்து வீழ செய்வர்
--ஜீகே