காதல் ஆசை

காற்றை கயிறாக்கி
மேகக்கூட்டத்தில் ஊஞ்சல் செய்து
உன்னோடு நான் பயணிக்க ஆசை
உன் மடி மீது படுத்துத்
தாயன்பினை நான் உணர்ந்திட ஆசை
வெயிலோடும் மழையோடும்
உன்னை நான் அணைத்திட ஆசை
காலம் கரையும் வரை
என் தோள் மீது நீ
சாய்ந்திட ஆசை
இடைவெளிகள் குறைய ஆசை
இருக்கங்கள் நிறைய ஆசை
அற்பத்தை சிற்பமாய் மாற்றினாய்
என் கவலையை
சொற்பமாய் ஆக்கினாய்
அறந்தரும் கதைகளைக் கேட்டேன்
வரம்வரும் கதையை
இங்கு தான் கண்டேன்
பச்சைக் கிளிக்குப்
பச்சென்று முத்தமிட ஆசை
அதை வாங்கிக் கொண்டு
உன் இச்சைகள் தொடர்வாயா
அன்பே..