தியாக சுடர்களுக்கு வீர வணக்கம்

தியாக சுடர்களே!

செந்நீரும் கண்ணீரும்
பன்னீராய் துளிதுளிக்க
கண்ணியமும் கடமையும்
கண்முன்னே ஓங்கி நிற்க
உடல் மாய்ந்தும் உயிர் நீர்த்தும்
உணர்வில் வாழும்
உன்னதர்களே!

மறுகணம் மரணம் அறிந்தும்
நாட்டிற்கென்றால் நறுந்தேன் என
மரணம் சுவைத்தும்
புன்னகை பூத்த புது மனங்கள்!!

மெல்லினமும் வல்லினம் ஆனது
பாரதத் தாய்க்கு ஒன்றெனில்
பெண்மையே நீ நெருப்பானாய்
சாம்பலிலும் சக்தி ஆனாய்
மாதருள் மணிச்சசுடர்களே
தரணியை தாங்கிய
தாரகைகளே!!

இன்னுயிர் மாய்த்து
ஈந்த சுதந்திரம்
இனம் கண்டு கொள்ளாமல்
எங்கோ செல்லும்
என் இளைய சமூகமே,

வருங்கலாம் காக்க
நிகழ் காலம் இழந்தோரை
நினைவில் கொள்ளாமல்
நிலைதடுமாறும் உடன்பிறப்புகளே,

என்றோ ஓர்நாள் நினைவுகூற
சுதந்திரம் சும்மா கிடைக்கவில்லை
ஒரு தலைமுறையே
தன்னை இழந்து
நம்மைக் காத்த சரித்திரம்!!!

இந்தியத் தாயின் பெருமை காத்து
தாய்ப்பாலை செந்நீராக்கி
நம் வீரத்தை ஏடாக்கி
தியாகம் எழுதிய சகாப்தம்!!

தியாக சுடர்களே
எம் இந்திய ரத்தத்தின்
வீரவணக்கம்!

எம் தாய் தமிழின்
கவி வணக்கம்!!

எழுதியவர் : நிலா (15-Aug-17, 10:23 am)
பார்வை : 1330

சிறந்த கவிதைகள்

மேலே