மழையாகிறது உன் நேசம்
மழைமேகம் உனது
கருவிழியை நினைவுபடுத்துகிறது
உன் பார்வையைப்போல்
வந்துவிழுகிறது மின்னல்
மெல்லத் தொடங்கி
பூமிக்குப் போர்வையாகிறது
மழை
உன் தழுவலைப்போல
தவளைகளின் சங்கீதத்தில்
களைகட்டும்
வயல் சபைகள் காத்திருக்கிறது
உன் வருகைக்காக
ஏரி நிரம்பியதா என
பார்க்கப் போகையில்
'வான் மிதவை'யாகிறது குடை
உன் நினைவில் பறக்கும்
என் இதயம் போல
மழையும் சுகமானது
உன் நேசம் போல
என்றும் தொடரட்டுமே
அது இன்று போல !
*******************
வான்மிதவை -பாராசூட்
'
@இளவெண்மணியன்