நீ இல்லை என்று

நீ இல்லை என்று தேடிக்கொண்டிருக்கிறேன் சபி..!
நீ எனக்குள் இருப்பதை மறந்து..!

எனக்குள் இருக்கும் உன்னோடு ஓயாமல் முத்தமிடுகிறேன்..!

ஓயாமல் காதல் சொல்கிறேன்..!

அதிதமாகும் காமத்தை அடிக்கடிகடி
உன்னோடு தீர்த்து கொள்கிறேன்...!

என்னை நானே மதமாற்றம் செய்து உன் மடியில் கிடக்கிறேன்..!

வார்த்தைகளால் என் காதல் சொல்ல முடியாத போது
வாய் முத்தம் கொடுக்கிறேன்..!

மனதில் உன்னோடு மனவாளனாய் வாழ்கிறேன்..!

ஆனாலும்
ஓரு ஏக்கம்..
இந்த இரவு சுமத்திவிட்ட சுமை..!

உன் வார்த்தையின் வாக்கியங்கள்
என் பார்வை ஒளியில் விழ வில்லை...!

இந்த இரவு இனியதுதான்
உன் மனதிலும் என் மனதிலும்..!
ஆனாலும் .....
போர்வையில் முடிவிட முடியாத ஒரு எதிர்பார்ப்புடன்...!
என்னை நினைத்துக்கொண்டு நீயும்,
உன்னை நினைத்துக்கொண்டு நானும் தூங்க போகிறோம்...!

இல்லை.....
ஏங்க போகிறோம்...!

எழுதியவர் : சுரேஷ் காந்தி (23-Aug-17, 10:28 pm)
Tanglish : nee illai enru
பார்வை : 309

மேலே