கண்களும் பொய் பேசுமா உன்னைக் காணாமல் இருந்திருக்கலாம் -8

என் விழிகளை கொஞ்சம் கொஞ்சமாக வாசித்தாய்
என் விழிகளை கொஞ்சம் கொஞ்சமாக ரசித்தாய்

என் விழிகளை கொஞ்சம் கொஞ்சமாக ருசித்தாய்
என் விழிகளிடம் கொஞ்சல் கொஞ்சலாக பேசினாய்

என் விழிகளுக்கு அஞ்சல் அஞ்சலாக அனுப்பினாய்
என் புன்னகை லஞ்சம் லஞ்சமாக வருகின்றன

இடையில் என்ன என்னதான் ஆகியதோ
மனதில் எண்ணம் எண்ணம்தான் மாறியதோ

உன் விழிகள் வேஷம் வேஷமாக போடுகின்றன
என் விழிகள் விஷம் விஷம்தான் குடிக்கின்றன

என் வேதனை கோஷம் கோஷம் ஆகின்றன
என் காதல் தோஷம் தோஷம் ஆகின்றன

உன் விழிகள் வஞ்சமா வஞ்சமா செய்தன
என் விழிகள் மஞ்ச மஞ்சளா அழுகின்றன

உன் உதட்டில் நஞ்சு நஞ்சா சிந்தினாய்
என் இதயத்தில் நெஞ்சு அஞ்சா சிதறுகிறதே

என் விழிகள் அஞ்சி அஞ்சிதான் விழிக்கின்றன
என் விழிகள் கெஞ்சல் கெஞ்சிதான் விளிக்கின்றன

உன் விழிகள் கொஞ்சம் கொஞ்சமாக மாறுகின்றன
என் விழிகள் தஞ்சம் தஞ்சம்தான் தேடுகின்றன
என் விழிகள் மஞ்சம் மஞ்சத்தில் நனைகின்றன

என் ஆசைகள் பஞ்சு பஞ்சாகப் பறக்கின்றன
என் ஓசைகள் ஓய்ஞ்சு ஓஞ்சு இறக்கின்றன

என் வலிகள் மிஞ்சும் ரணமாக மாறுகின்றன
என் வனங்கள் விஞ்சும் தீயாக எரிகின்றன

உன் அன்பை உஞ்சம் உஞ்சமாக கேட்கிறேன்
உன் அன்புக்கு பஞ்சம் பஞ்சம்தான் பார்க்கிறேன்

உன் நினைவுகளை மிஞ்ச மிஞ்சத்தான் சேர்க்கிறேன்
உன் அன்பில்லாம கொஞ்சம் கொஞ்சமா சாகிறேன்

விழிகளில் நேசத்தைக் காட்டிவிட்டு
வழிகளில் நெருஞ்சிமுள்ளை வீசிவிட்டு
வாழவைக் கடந்து போனாய் ஏனடி
வஞ்சியின் கண்களும் பொய் பேசுமா .....!

எழுதியவர் : யாழினி வளன் (1-Sep-17, 4:23 pm)
பார்வை : 134

மேலே