வாழ்கிறது
உன் நினைவுகள்
என்னும் மாத்திரையை
விழுங்கி விழுங்கியே
வாழ்கிறது
நீ தந்துபோன
காதல் நோயும்
உனைக் கொண்ட
இந்த இதயமும்
உன் பாதச்சுவடு
என்னும் யாத்ரையை
பின் தொடர்ந்தே
போகிறது
என் பேச்சுக்கேட்காத
என் கண்களும்
நீ வாழும்
என் இதயமும்