இன்றியமையா தோழனே

எத்தனை தோழமை கிடைத்தாலும் உனது அன்பைப் போல் இல்லை ஆருயிர் நண்பனே
பிறந்த தருணம் முதல் உன் விரல் பிடித்து நடந்தேன் அன்புத் தோழனே
எத்தனை சண்டைகள்
எத்தனை பகிர்தல்கள்
மனதில் லயித்த தருணங்கள் இன்றியமையாதது தோழனே
காரணமின்றி இட்ட சண்டைகள்
அன்று வீடே ஒரு போர்க்களம் தான்
இன்று வெறுமை ஊன்றி நிற்கிறதே
மண்ணில் புரண்டு சேறும் சகதியுமாய் குருதி வழியாமல் வீடு சேர்வோம்
மிதிவண்டி ஏறி போட்டி கொண்டு வென்றோமே
நினைவுகள் மலர்கிறதே
பிரியா தோழமை கொண்டிருந்தோம்
இன்று நினைவுகளிலே பேசிக்கொள்கிறோம்
இது தான் நம் நட்போ
கேட்டால் சிறியவர்களில்லை
பெரியவர்கள் என்று கருதுகிறார்களே
நட்பிற்கும் வயதுண்டோ தோழனே
தெரியவில்லை
ஒவ்வொரு நொடியும் காத்துக்கொண்டிருக்கின்றேன்
மீண்டும் சண்டையிட
மீண்டும் நட்பு துளிர்க்க.........

எழுதியவர் : பிரகதி (2-Sep-17, 3:53 pm)
பார்வை : 414

மேலே