கவிதை கோர்க்கிறேன்

அடர்ந்த வனத்தினுள்
அலைந்து
அங்கு தேடிய
வார்த்தைகளைக் கொண்டு
கவிதை கோர்க்கிறேன்.

வனத்திலிருந்து
மீள வழி தெரியாமல்....

போகும் போது
சிந்திய நினைவுகளையும்,
விழுந்த வார்த்தைகளையும் ,
சுவடு பார்த்து
மீள்கிறேன்.

மீண்டும் மீண்டும்
வனம் தேடியே அலைகிறேன்.
அங்கு சிதறிய
உன்
நினைவுகளை தேடி.

-லக்ஷ்மி பாலா

எழுதியவர் : (1-Sep-17, 7:46 pm)
Tanglish : kavithai korkiren
பார்வை : 182

மேலே