தோள் கொடுக்கும் தோழன்

தேடி பிடிக்கவில்லை
உன்னை,
என்னை தேடி வந்து
கை கோர்த்தவன் நீ
தோழனாக...

திருமணம் வரை
பெற்றவர்கள் உறவு,
தாலி கழுத்தில்
ஏறிய பின்
கணவனின் உறவு,
குழந்தை பெற்ற பின்
தாய்மையெனும் உறவு,
இதில் என்றுமே
நிலைத்திருப்பது
உன்னுடைய நட்பு
என்னும் உறவு...

மலையென பல
சாெந்தங்கள் இருந்தாலும்
மடுவாகிப்போகும்,
உன் தோழமைக்கு முன்னால்...

நட்பிற்கு
பாலினம் தேவையில்லை
என்பதை அறியாத
மூடர்களுக்கு
நாம் காதலர்களாய்
தெரிகின்றோம்..

நம் நட்பும் ஒருவித
காதல் தான்
காமம் கலக்காத
காதல்,
திருமணம் என்னும்
குறுகிய வட்டத்திற்குள்
சிக்காத காதல்,
சூழ்நிலையை
காரணம் காட்டி
பிரிந்து செல்லாத
காதல்,
எந்த நேரத்திலும்
எந்த இடத்திலும்
விட்டுக்கொடுக்காத
காதல்...

நம் நட்பிற்கு
யாரும் சான்றிதல்
தர தேவையில்லை,
நம் நட்பு என்றும்
ஓடும் வற்றாத
ஜீவ நதியாய்,
நம் உயிர்
விண்ணில் கலக்கும் வரை....

எழுதியவர் : மதிமகள் சண்முகபிரியா (31-Aug-17, 3:30 pm)
பார்வை : 1424

மேலே