நண்பன்
உறவுகள் எனும் உன்னத வார்த்தைகள்
நம்மை விட்டு பிரியும் தருவாயில்
எதிர்பார்ப்பின் அர்த்தம் தெரியாத ஒருவன்
கைகொடுப்பவன் நண்பன் ..
உன் கண்களில் விழும்
புன்னகை பூக்களை உன்னுள் சேர்க்க
காத்திருப்பவன் நண்பன் ..
நட்பின் வாயிலில்
உன் கைபிடித்து பயணம் செய்ய
காத்திருப்பான் நண்பன் ...