Bali - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : Bali |
இடம் | : thanjavur |
பிறந்த தேதி | : 19-May-1973 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 01-Oct-2013 |
பார்த்தவர்கள் | : 127 |
புள்ளி | : 41 |
பஞ்சு மிட்டாய்
சத்தம் கேட்டு
பறந்து வந்து
பஞ்சாய் ஒட்டிக்கொள்ளும்
மனம் - ஐன்னலோரம்.
பிடித்த பாடல்
ஒலிக்கும் நேரம்
கொஞ்சம் எட்டித்தான் பார்க்கும்
மனம் - சுவரோரம்.
ஏழு கழுதை
வயதானால் என்ன!
வானவூர்தி பறந்தால்
தாவி தான் பார்க்கும்
மனம் - வானோரம்.
என்றும் மாறாத
அதே அழகு மனம்.
மாறியதென்னவோ
அப்பா - என்றவுடன்
அலறிக்கொண்டு வருகிறது
அழுகையும்
ஆத்த்ரமும்.
பட்டால் தான்
புரியும் என்றால்
பரவாயில்லை.
போனால் தான்
தெரியும் என்றுணர்த்தும்
வஞ்சகன் - நீ
நிழல் கூட
நகர்ந்துவிடும்
நினைவுகள் மட்டும்
குத்துக்கல்லாய்.
நினைவுகளை
நகர்த்த கூட முடியாத
கோழை - நீ
அப்பாவை
அனுப்பியிருக்கிறேன்.
தரிசிக்க வேண்டியவன் - நீ.
- லக்ஷ்மி பாலா
பி.கு : இந்த படைப்பு கடவுளை புண்படுத்தினால் நான் பொறுப்பல்ல.
என்
அம்மாவைப் போல்
என்னையும்
என் அடுக்களையில்
புலம்ப வைக்க
ஆயுத்தமாகிறாய்.
நானோ
புலம்பல்களை
புதைத்துவிட்டு,
கடந்து செல்ல எத்தனிக்கிறேன்.
உனக்காக இல்லை,
என் மகள்
தலைமுறையினரிடம்
புலம்பல்கள்
புலம் பெயர்ந்துவிடக்கூடாதென.
என் தலைமுறை
அம்மாக்கள் அழகாக
மூளைசலவை செய்யப்பட்டு
முன்னேரிவிட்டார்கள் .
அடிமை சுமைதாங்கியிலிருந்து
சுதந்திர சுமைதாங்கிகளாய்.
- லக்ஷ்மி பாலா
உன்
ஆதிக்கத்தின்
அழுத்தம் தாங்காமல்
விரியும்
கவிதைகள்.
உன்னையும்
உன் நினைவாதிக்கத்தையும்
கவிதைகள் அரிய
வாய்ப்பில்லை தான்.
உனக்கும்
தெரியவில்லை
எனும் போது தான்,
மனம் நழுவி
மீண்டும்
கவிதையில்
விழுகிறது.
-லக்ஷ்மி பாலா
இமையை
தாண்ட மறுக்கிறது
கண்ணீர் .
எதிரே
குழந்தைகள் .
காதலை பறைசாற்ற
ஆயிரம் இணையதளங்கள்
இப்போது .
வருடத்திற்கு ஒரு முறை
நினைவூட்ட
காதலர் தினம்
தற்போது .
ஆண்டாண்டு காலமாய்
காதலையும் வாழ்க்கையையும்
வென்றவர்கள் சொன்ன
பாடங்கள்
காதலில் வெற்றிபெற்றவர்களை விட ,
காதலை விட்டுகொடுத்தவர்களே
காதலின் உண்மையான
சுமைதாங்கிகள் .
இணையதளங்களும்,
காதலர் தினமும் ,
பூக்களும் ,
வாழ்த்து அட்டைகளும் ,
கொண்டாடங்களும்
இன்னுமொரு சுமையே .
இவைதான் இன்றைய
காதலின் அடையாளம்
எனில்
வருந்துகிறோம் .
காதல் சுமைதாங்கியாகக்
இருக்க கூட
தகுதியற்றவர்கள் .
தெரிந்து கொள்ளுங்கள் .
காதலில் வெற்றி பெற ,
கொஞ்சும் கண்களும் ,
கொஞ்சம் க