சுதந்திர சுமைதாங்கிகள்

என்
அம்மாவைப் போல்
என்னையும்
என் அடுக்களையில்
புலம்ப வைக்க
ஆயுத்தமாகிறாய்.
நானோ
புலம்பல்களை
புதைத்துவிட்டு,
கடந்து செல்ல எத்தனிக்கிறேன்.
உனக்காக இல்லை,
என் மகள்
தலைமுறையினரிடம்
புலம்பல்கள்
புலம் பெயர்ந்துவிடக்கூடாதென.
என் தலைமுறை
அம்மாக்கள் அழகாக
மூளைசலவை செய்யப்பட்டு
முன்னேரிவிட்டார்கள் .
அடிமை சுமைதாங்கியிலிருந்து
சுதந்திர சுமைதாங்கிகளாய்.

- லக்ஷ்மி பாலா

எழுதியவர் : (1-Sep-17, 7:54 pm)
பார்வை : 117

மேலே