தாயின் இருட்டறை
சுற்றி திரிந்த
என் ஆன்மாவிற்கு
கடவுள் தந்த வீடு
தாயின் கருவறை
அங்கே முழுவதும்
கருப்பு நிற இருட்டுகள்
முதலில் பயமாகத்தான் இருந்தன
பின்பு
உற்சாகம் ஓங்கியது
மேகத்தை காட்டிலும்
மென்மையான அறைகள்
தண்ணீரில் தவழும் மீன்களைப் போல்
பண்ணீரில் தவழ்ந்து
கொண்டிருந்தேன்
அவ்வப்போது என்னிடம்
பேசும் வார்த்தைகளும்
என் மனதிற்க்கு
தாழிசையாய் இனித்தன
அந்த இருட்டறையில்
வருடும் சுவாசக்காற்றும்
மாசுக்கள் நீக்கப்பட்டது..
அங்கே முகர்ந்து பார்க்க
வாசனை இல்லை..
வர்ணிக்க கவிதை மட்டுமே இருந்தன
குளிர்ச்சியூட்ட நிலா இல்லை
ஏனெனில்
அங்கு நானே நிலா ஆனேன்
அங்கு பூக்களோடு வீசும் காற்று இல்லை
அதைக்காட்டிலும் உன்னதமான
அம்மாவின் சுவாசத்தோடு வீசும்
சுவாசக் காற்று அங்கே..
இயற்கையும் கிடையாது
அங்கே என் அன்னையே இயற்கையானாள்
கடவுள் புகைப்படமும் இல்லை
ஏனெனில்
உன்னதமான கடவுள்
என்னை சுமந்து கொண்டிருந்தாள்
அங்கே.....