அதே அழகு மனம்
பஞ்சு மிட்டாய்
சத்தம் கேட்டு
பறந்து வந்து
பஞ்சாய் ஒட்டிக்கொள்ளும்
மனம் - ஐன்னலோரம்.
பிடித்த பாடல்
ஒலிக்கும் நேரம்
கொஞ்சம் எட்டித்தான் பார்க்கும்
மனம் - சுவரோரம்.
ஏழு கழுதை
வயதானால் என்ன!
வானவூர்தி பறந்தால்
தாவி தான் பார்க்கும்
மனம் - வானோரம்.
என்றும் மாறாத
அதே அழகு மனம்.
மாறியதென்னவோ
மனிதர்கள் மட்டும் .
- லக்ஷ்மி பாலா
.