சிந்தனையில் பிழை

காலம் மாறி போச்சு புள்ள
காலாச்சாரம் காணோம் புள்ள
கண்டுபிடிக்க யாருமில்ல
கவல மட்டும் படுறேன் உள்ள

பைத்தியம் புடிச்சு திரியுறாங்க
பகட்டா வாழுறாங்க
எந்திர வாழ்க்கையிலே அடிமையா
சாகுறாங்க..
சட்ட பேன்ட் கிழிஞ்சு போச்சு
பேஃஷனும் ஆகிப்போச்சு
பட்டிக்காட்டு பிள்ளைகளுக்கும்
பகுறு கூடிப்போச்சு..
'சாராயம்' குடிப்பதெல்லாம்
கலாச்சாரமாகிடுச்சு
'சர்க்காரும்' இதைத்தானே
நம்பித்தான் இருந்திருச்சு..
விவசாயம் அழிஞ்சு போச்சு
நிலமும் காணம போச்சு
கார்ப்பரேட் களவாணிங்க
ஆடுறாங்க கண்ணாம்பூச்சு..
நூறுநாள் வேலைத்திட்டம்
ஒருவேலையும் செய்யா திட்டம்
ஏழுநாள் கழிச்சு தானே
ஏமாத்தும் நல்ல திட்டம்..
கட்டையில பாடுவாங்க அப்போ
ராகத்துல பாடுவாங்க
இப்போ கண்டபடி பாடுறாங்க
காசுக்காக கூவுறாங்க..
சவம் கூட அரசாளும் கை-ரேகை
வெச்சுத்தானே
75-நாள் என்னாச்சோ
அடுத்த 5-உயிர்போச்சே..
பகுத்தறிவ மறந்த மக்கா
சாதிவெறி நாட்டாலே
மொழியக்-கூட மதிக்கலயே
முன்டமாகி போனோமே.

எழுதியவர் : கௌதம ஈழன் (11-Sep-17, 1:23 pm)
சேர்த்தது : gowtham59b60a98cdb31
பார்வை : 78

மேலே