தூயவள் நடப்பு
சக உறவில் என்னோடு
அனுதினமும் நீ ...
உன் பிரியங்களை புன்னகை
படுத்த புத்துயிர் நரம்புகளை
மீட்டி கொண்ட உன் உற்ற நண்பனாய்
என்றும் நான் ..
உன் ஆதார வாயில்களை
திறக்கும் காவல் காரனாய்
உன் வெற்றியை கொண்டாட
காத்திருப்பவன் நான்...
ஓவ்வொரு பெண்ணுக்கு
பின்னாலும் ஆண் இருந்தால் என்ன ?
அவமானமா !!
அது அங்கீகாரம் ...
பெண்மையின் பேரியக்கத்தில்
கொடி பிடிக்கும்
உண்மை தொணடனாய் நான்
இருப்பதில் எப்போதும்
நான் தொய்வு பட்டதில்லை ...
புருவ மீசைக்காரிகளின்
புதிய வரலாற்றின்
முதல் படிக்கு
ஏணி சுமப்பதில் எனக்கென்ன
தாழ்வு மனசு ....
ஆகாய நுழைவு சாவியை
கொடுத்து விசால வானத்தின்
விடி வெள்ளிகளை
அறுவடை செய்துவர சொல்வதில்
எனக்கென்ன
அவமான ஆளுமை ....
அவளின் எண்ணங்களை
என் அகமாய் கொள்ள
ஏற்புடையவனாகிறேன்
என்றும் நான் ...