வீழ்வேனா
இறைவா
நான் வேண்டி நின்ற எதுவும்
ஈடேறவில்லை இந்நாள் வரை ....
மீண்டும் வேண்டி நிற்கின்றேன்,
இம்முறை வேறொன்றிற்காக!
இறைவா!
இரு கூறாய் கிழித்தெறி
எனது இதயத்தை....
உடலிலிருந்து பீறிட்டு வெளியேறச்செய்,
எனது செங்குருதியை....
அணு அளவில் சிதைத்து விடு,
எனது ஊனை....
இனியும் எதற்கு பிரித்தெடு,
எனது உயிரை...
'நான் வாழ தகுதியற்றவளாய்
திறமையற்று போனால்'