இன்றைய குடும்ப உறவுகள் சிதையக் காரணம் -- பணமே -- கவியரங்கம்

இன்றைய குடும்ப உறவுகள் சிதையக் காரணம் -- பணமே !! -- கவியரங்கம்

தமிழ் வணக்கம் :-


தாய்மொழியாம் தமிழ்மொழியைத் தாள்பணிந்து வணங்குகின்றேன் .
வாய்மொழியாய்ப் பேசிடவும் வகையானத் தாய்மொழியே
சேய்போல எனைக்காக்கும் செந்தமிழாம் தாய்மொழியே !
தாய்போல எண்ணுகின்றேன் தமிழ்மொழியே நீவாழ்க !!!


அவையடக்கம் :-

நிலாமுற்றம் முகநூலில் நிறைவாகக் கவியரங்கம்
உலாவரவும் செய்கின்றோம் உவப்பில்லா உவகையினால்
பலாக்கனியைப் போன்றதொரு பல்சுவையைத் தருகின்ற
நிலாமுற்றம் கவியரங்கம் நீடுழியும் சிறந்திடவே !!!!

தலைமை வணக்கம் :-

தலைமைக்கு வணக்கத்தைத் தாய்மொழியில் சொல்லுகின்றேன்
கலைகளிலே சிறந்தவராம் கண் .

இன்றைய குடும்ப உறவுகள் சிதையக் காரணம் -- பணமே !

கை நிறைய காசிருக்க
கால் படும் இடமெல்லாம் தூசாக ,
பிறப்பிற்கும் இறப்பிற்கும்
இடையில் ஊசலாடும் வாழ்க்கை !!!

காசு - ஒரு காதலி பேசுகிற மொழி
செவிமெடுங்கள் எல்லோரும் .
பெண்ணைக் காதலிப்பவர்களை
விட என்னைக்
காதலிப்பவர்கள் தான் அதிகம் ;
பெண்ணைக் காதலித்தால்
அரவணைப்பு கிடைக்கும் '
என்னைக் காதலித்தால்
அரசாங்கமே கிடைக்கும் !!

" நான் பணம் பேசுகிறேன் ;
என் ஒரு வாய் திறந்தால்
நான் திருவாய் மலர்ந்தால்
உலகத்து வாய்கள் எல்லாம்
ஊமைகளாகி விடும் ;


நான் காகிதம் தான் - ஆனால்
எந்தக் காற்றிலும் பறக்க மாட்டேன் ;
நான் நினைத்தால் காற்றையே
என் காலடியில் கிடக்க வைப்பேன் !!!

வடிவத்தில் சிறியவன் - ஆனால்
வலிமையில் பெரியவன் ;
நிரந்தர வீடென்று
எனக்கெதுவும் கிடையாது ;
மத்திய வங்கி - என் தாய் வீடு ;
மண்டிக் கிடக்கும் மற்ற
வங்கிகள் - நான் புகுந்த வீடு ;
நான் அதிகம் போகும் வீடு
அம்பானி வீடு ;
ஆசைப்பட்டு வாழ நினைப்பதோ
ஒரு ஏழையின் வீடு ;
பத்திரமாய்ப் பதுக்கி என்னை
மறைத்து வைத்திருக்கிறார்கள் ;
அது என் சின்ன வீடு
புத்தகம் வாங்குவதற்கு
ஓடி வருகிறேனே -
இதுதான் நம்ம வீடு !!!!!!

பணம் - வெறும் காகிதமல்ல
சகலத்தையும் என்னிடம்
அடகு வைக்கிறார்கள்;
சிலநேரங்களில்
கலைமகளையே அடகு
வைக்கிறார்கள் ;
நானோ லெட்சுமி
சகோதரியை அடகு வைக்கும்
போது மட்டும் சங்கடப் படுவேன் ;
வெறும் காகிதம்
என்றென்னைக்
கணித்து விடாதீர்கள் ;
நானில்லை என்றால்
அரசு அலுவலகங்களில்
ஒரு காகிதமும் நகராது.


நன்றி மடல் :-

நன்றிசொல்ல வார்த்தையில்லை நல்வாய்ப்பு தந்தமைக்கு
என்றனையும் மதித்திங்கே ஏற்றதொரு அழைப்பினை
இன்றிங்கே வழங்கிட்ட இன்முகத்தோர் நிலாமுற்றம்
நின்றிங்கே சொல்லுகின்றேன் நிறைவான கவியரங்கம் .!!!

படைப்பாக்கம் :-
பைந்தமிழ்ப் பாமணி . சரஸ்வதி பாஸ்கரன்
திருச்சி , தமிழ்நாடு

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (16-Sep-17, 10:59 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 108

மேலே