நல்லதம்பி அண்ணன் பஜ்ஜி போண்டா கடை

மாலை நெருங்கியதும்
மாடிப்படியேறி
அலுவலகம் வரை
நுழைந்து விடுகிறது
மசாலா போண்டாவின்
வாசம்.......
சுருக்கென உரைக்கும்
மிளகாய் பஜ்ஜியோடு
ஒரு டீ!
அது போதும்
அந்தநாளின்
ஆசுவாசத்திற்கு.......
உருளைக்கிழங்கு
வாழைக்காய்
பெரிய வெங்காயம்
அடுத்தது என்ன?
வாணலிவரை
வாய் வைத்து
காத்திருந்ததுண்டு.......
சிலசமயம்
தேங்காய் சட்ணியில்
மிதக்கும் மெதுவடையோடு
கரைந்து போகும்
இரவிற்கான
இனிய விருந்து.......
சுய்யமும் அதிரசமும்
தேன்குழுலும்
இனிப்பிற்கென
ஏதோ இருக்க......
கடைசியில்
சில்லரையில்லை என
எடுத்து சுவைக்கும்
பருப்பு வடை
ஒளித்து வைத்திருக்கும்
அடுத்தநாள்
வரவிற்கான ருசி....

அடுத்தநாள்!.......

மாலை நெருங்கியதும்
மாடிப்படியேறி
அலுவலகம் வரை
நுழைந்துவிடுகிறது
மசாலா போண்டாவின்
வாசம்.......

*எனக்கு என்னமோ?
''நளன்"
நல்லதம்பி அண்ணன்
வடிவில்
பஜ்ஜி போண்டா கடை
வைத்திருப்பதாகவே
தோன்றுகிறது*

எழுதியவர் : கொண்டலாத்தி.. (1-Oct-17, 9:50 am)
பார்வை : 225

மேலே