தீபாவளி உரைக்கும் உண்மை

அடைத்துவைத்த வேதிமருந்துகள்
பற்ற வைத்ததும் வெடிக்கும்- ஊரெங்கும் பட்டாசுகள்
இடைவெளியின்றி
ஒலிக்கும்

பொருட்கள் புத்தாடை
எடுக்க பலர் பாதம்
ஆடம்பரக் கடைகள்
மிதிக்கும்- இப்படியிருந்தால்
தெருக்கோடி
தள்ளுவண்டி
வியாபாரிகளின்
வாழ்வு எப்படி
செழிக்கும்?

நரகாசூரன் இறப்பின் கொண்டாட்டம்
என மடையர்மனம்
உரைக்கும்- காற்று கறை படிந்து இரைச்சல் காது கிழிப்பதை
மனிதயினம்
இரசிக்கும்

வீதியெங்கும் வேதிக்கழிவாய்
துர்நாற்றத்துடன்
காகிதச் சிதறல்
மிதக்கும்- அதை
அலுத்துக்கொண்டு
அழுக்காடையுடன்
அள்ளும் கைகளுக்குத்தானே
வலிக்கும்

உற்றுப்பார் உனக்குள்ளே
கடுகளவு
மனிதாபிமானம்
இருக்கும்- அது
எப்பொழுதும்
இருந்துவிட்டாலே
துளியளவாவது
வாழ்வு இனிக்கும்
நமக்கும்...

எழுதியவர் : கார்த்திகைசெல்வன் (20-Oct-17, 12:30 am)
பார்வை : 92

மேலே