குடும்பம்

நிரந்தரமில்லா இவ்வுலகில்
எதற்காக நிரந்தரமான
ஓர் இடம் தேடுகிறாய் ...
தேடுதல் கிடைத்தாலும்
திருப்தி படாத மனம் உன்னுள்
புதைந்திருப்பதை மறவாதே ....
எதுவும் இல்லாதவனிடம்
சிறு புன்னகை குடு
உனக்கான பாதையை அவன் விதைப்பான் ....
பாதைகளில் முட்களை
கடந்தால் புன்னகை பூக்கும்
சுவாசம் உணர்வாய்.......
உன் உணர்வுகள் உண்மையாகும் போது
உன்னுடைய விதைகளும் நேர்வழி படும் .....

எழுதியவர் : வினோதினி முத்தமிழ் செல்வ (20-Oct-17, 12:13 pm)
Tanglish : kudumbam
பார்வை : 88

மேலே