நடனம் அவள் ஜீவன் --- முஹம்மத் ஸர்பான்

தேவதை போல் என்னவள்
ஓவியங்கள் வரைகிறேன்
கவிஞனாக நினைக்கிறேன்
அருவிகளில் நீந்துகிறேன்
பூக்களில் தீக்குளிக்கிறேன்
ஈசல்களாய் கனவுகள் தினம்
மனதினுள் மரணிக்கின்றன
கண்ணீரில் சொற்களில்
டையரிகள் வாசிக்கிறேன்
என்னவளின் காலடியில்
சந்திரனை புதைக்கிறேன்
அதிசயப் புன்னகையில்
நிம்மதியை யாசிக்கிறேன்
பூங்காற்றின் அங்காடியில்
சுவாசங்கள் வாங்குகிறேன்
சாம்பல் நிற பறவைகளிடம்
சிறகுகளை களவாடுகிறேன்
இமைகளின் ஆயுத எழுத்து
முத்தங்களின் ஆய்வு கூடம்
காதலின் பூகம்பத்தில்
ஊமையும் பேசுகிறான்;
முடவனும் நடக்கிறான்
அர்ஜுனா பானு பேகம்
இரவினை நேசித்தாள்
கரச் சேதக் கருவறையில்
தாஜ்மஹால் பிறந்தது.
ஐந்து வயதில் என்னவள்
நடனத்தை நேசித்தாள்.
பத்து வயதில் உனக்காக
சலங்கை பரிசளித்தேன்.
இருபது வயதில் உனக்காக
ஜீவனில் ஓர் ஆலயம்
கட்டிக் கொண்டிருக்கிறேன்
நீ எப்போது குடி வருவாய்!


குறிப்பு:- அர்ஜுனா பானு பேகம் மும்தாஜின் இயற்பெயர்

எழுதியவர் : முஹம்மத் ஸர்பான் (20-Oct-17, 10:43 am)
பார்வை : 270

மேலே