ஆண்மை

அச்சம் அடங்கிப் போன ஆணவமாய் கூட இருக்கட்டும்,
அதிலும் பெருமைதான் அழுத்தமாய்க் கூறுவோம்,
வளைக் கரங்கள் வாளேந்தும் வானாளும்
பலத்துடன்,
களையருக்கும் கைகள் வினையருக்கும் வேளையிலே,
சீரிய வேங்கைகள் சினத்துடன் சிதைக்கப் படும்,
பதுங்கி பாய்ந்த வெம்புலியின் வேகம் கண்டு விரோதம் பதறியோட,
வெறி கொண்ட உங்களுக்கு வேடிக்கை மட்டுமே மிஞ்சியிருக்கும்,
செங்கனல் விழிகள் சிறப்பாய் கொதித்தெழ,
சின்னாபின்னமாய் சிதைக்கப்படும் உங்களின் ஆணாதிக்க பாவனை,
வேசிப் பட்டம் சூட்டும் வீணர்களே,
இராவணன் கூட தகுதி இழந்தான் உங்களது தன்மானமற்ற பார்வையில்,
ஆண்மை என்று கூறிக் கொள்ளாதீர்,
அவமானம் என்னவோ உங்களுக்குத்தான்,
சீக்கிரம் திருத்திக் கொள்ளுங்கள் உங்கள் ஆணாதிக்க அகராதியை,
இல்லையேல்
சீதைகள் சிதை ஏறிய காலம் போய் சீக்கிரம் கொழுத்தப் படுவீர்.

எழுதியவர் : கார்த்திகா பாண்டியன் (10-Nov-17, 12:54 pm)
Tanglish : aanmai
பார்வை : 166

மேலே