ராம்கி ஜான்கி

அடியே செல்லம், சீக்கரம் வாடி இங்க.
😊😊😊😊😊😊😊😊😊😊
என்னங்க மாமா?
😢😢😢😢😢😢
எம் பேரு என்னடி?
😊😊😊😊😊😊
என்னங்க மாமா, உங்க பேர மறந்திட்டீங்களா?
😊😊😊😊😊
எம் பேர நான் எப்படீடி மறப்பேன் என் செல்லம்?
@#@#@@
அப்ப, எதுக்கு உங்க பேரு என்னன்னு எங்கிட்ட கேட்டீங்க?
@@@@
அது ஒரு முக்கியமான விசயம். சரி, எம் பேரச் சொல்லுடி எந் தங்கம்.
@@@@@
மாமா நான் பட்டிக்காட்டில பொறந்து வளந்தவ. மனைவி கணவர் பேரச் சொல்லறது அவ தன் கணவரை அவமதிக்கற மாதிரிங்க. அதனால உங்க பேரை நாஞ் சொல்லமாட்டங்க மாமா!
######
இன்னைக்கு மட்டும் ஒரே ஒரு தடவை எம் பேரச் சொல்லுடி எஞ் ஜானகித் தங்கம். எம் பேர நீ சொன்னா உனக்கு ஒரு நல்ல செய்தியச் சொல்லப்போறேன்.
@@@@@@
சரிங்க மாமா. நீங்க கெஞ்சி கேக்கறதால உங்கப் பேர நாஞ் சொல்லறேன். உங்க பேரு ராமகிருஷ்ணன்.
@@@@@@
ரொம்ப நன்றீடிச் செல்லம். என்னோட நண்பர்கள் என்ன எப்பிடி கூப்படறாங்கன்னு உனக்குத் தெரியுமா?
@@@@
தெரியாதுங்க மாமா.
😊😊😊😊😊
அவுங்கெல்லாம் எம் பேரச் சுருக்கி 'ராம்கி' -ன்னுதான் கூப்புடுவாங்க. நானும் எம் பேர 'ராம்கி' -ன்ன் அரசிதழ்ல பதிவு பண்ணீட்டேன். @@@@
அப்பிடீங்களா?
@@@@@
ஆமாம். ராமகிருஷ்ணன் ராம்கி ஆனா ஜானகி என்ன ஆகணும்.
@@@@
நீங்க இருக்கும்போது எனக்கு ஒண்ணும் ஆகாதுங்க மாமா?
@@@@@
அடியே பட்டிக்காட்டுச் செல்லம். ராமகிருஷ்ணன் ராம்கி ஆனா ஜானகி ஜான்கி ஆகணும். இனிமே நீ எஞ் செல்ல 'ஜான்கி'டீ.
😊😊😊😊😊😊
அப்பிடீங்களா மாமா. நீங்க சொன்னா சரியாத்தான் இருக்குமுங்க மாமா. அய் இனிமே நாஞ் ஜான்கி.
👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
சிரிக்க அல்ல. சிந்திக்க

எழுதியவர் : மலர் (13-Nov-17, 11:50 pm)
பார்வை : 206
மேலே