பதிலில்லா இரவு

மறக்க மறந்த
நினைவுகள் நிரம்பிய நெஞ்சம்!

உறங்க மறந்த
கனவுகள் நிரம்பிய கண்கள்!

நினைவுகள் யாவும் மீண்டும் நிகழுமா?
கனவுகள் யாவும் மெய்படுமா?

இக்கேள்விகளின் பதிலை தேடி
இருளும் இன்றைய இரவு...

எழுதியவர் : காயத்ரி (15-Nov-17, 10:32 am)
பார்வை : 102

மேலே