அவனுக்கான நாட்கள் மிகக் குறைந்தது

வாழ்நாட்களோடு ஒப்பிடும்பொழுது அவனுக்கான நாட்கள்
மிகக் குறைந்தது., குறுகியது...

மீதமுள்ள பெருவாரியான நாட்களையும் துரோகங்கள்
நேர்முகமாகவோ இல்லை மறைமுகமாகவோ அவனை பயன்படுத்திக்கொள்ளும்.

இங்கு கலாச்சார கட்டமைப்பென்பது
ஆண்களை வானம்தோண்டிய பள்ளத்தின் வாழ்நாள் சுமைதாங்கி கற்களாகவே பயன்படுத்திக்கொள்கிறது.

இது
அவனால் ஏற்றுக்கொண்ட பொறுப்புதான்,
அதனாலே அதன் வலிகள் பாரமாயிருப்பதில்லை.

இருதலைக்கொள்ளியாகவே
அவனின் அதிகமான நாட்கள்
நகர்ந்திருக்கும்.

அவனுக்கான முக்கியத்துவங்கள்
வேறொருவருக்காக பறிக்கப்பட்டுக்கொண்டேயிருக்கும்.

காலம் ஆண்களை,
நட்பு-பொறுப்பு
காதலி-குடும்பம்
மனைவி-பெற்றோர்
இதில் ஒன்றை மட்டும் தேர்ந்தெடுக்கச்சொல்லி
மற்றோன்றிற்கு துரோகியாக சொல்லிக்கொண்டிருக்கும்..

எழுதியவர் : மகேந்திரராஜ் பிரபாகரன் (15-Nov-17, 11:13 am)
பார்வை : 106

மேலே