காதல் மனம்
காற்று வெளியிடையே நீ நடந்து போகையில்
என் நாடி துடிக்குதடி
கண்ணீரண்டு போதலியே
வட்ட நிலா பொட்டுடன்
சிட்டாய் பறந்து போறவளே
சிற்றிந்த இதயத்தை
சிறைப்படுத்தி போறாளே
மஞ்சள் இட்ட சட்டையடா
மல்லிகைப்பூ வாசமடா
பூப்பறித்து போறாளே
பூக்கூடை என் கையில்
மருதாணி இட்டிருக்காள்
நிகச்சுத்தி வந்திருக்கோ.. ? இல்லை
ஒப்பனை செய்திருக்காள்
ஓவியமடா அவள்
மழைக்காலத்து மயிலா..?
பருவகாலக் கிளியா..?
சொல் பெண்ணே நீ எனக்கு
சொல்லாமல் போறாளே....