மனத்தொகுப்பாளன் 2

வேறு எடிட்டரை வைத்து தான் மாஸப் பண்ணவேண்டும் என்று போன சஞ்சனா எல்லா எடிட்டரும் பிசியாக இருப்பதால் ஜனாவை வைத்துதான் எடிட் பண்ணனும் போல நினைத்து ஜனா இருக்கும் அறையை நோக்கி வருகிறாள்

உள்ளே ஜனா மிகுந்த வருத்ததுடன் கண்ணத்தில் கைவைத்துக்கொண்டு மானிட்டரை பார்த்துக்கொண்டு இருந்தான்

திடிரென சஞ்சனா உள்ளே நுழைந்தாள் இவனுக்கோ ஆனந்தம் பற்றிக்கொண்டது

ஆயிரம் கோடிகள் கொடுத்தாலும் இது போன்ற சந்தோசத்தை காண முடியாது
ஜனா தன் மனதுக்குள் இதோ பாருடா கடவுளா பாத்து தான் அவள திருப்பி அனுப்பி இருக்காரு ஒழுங்கா நிதானமா, தைரியமா பேசு என எண்ணி
அவளை பார்த்து என்ன ஆச்சுங்க

இல்ல எல்லா எடிட்டர்ஸ் சன் டெலிவிசன் அவார்டு எடிட் ல பிசியா இருக்காங்க சோ நீங்க தான் பண்ணனும் இந்த வீக் பண்ணாதான் நெக்ஸ்ட் வீக் டெலிகாஸ்ட் பன்னுவாங்க அதானால நீங்களே பண்ணிடுங்க

ஹலோ ஏங்க இப்படி நான் புதுசா ஜாயிண்ட் பண்ணி இருக்கனு தான சொன்ன எடிட்டிங் தெரியாதுனா சொன்ன அதுகுள்ள எழுந்து போய்டிங்க

அப்படிலாம் இல்லைங்க நீங்க புதுசு சோ நார்மல் பேர்ட்டன் தெரியாதுனு நினைச்சிட்டன் சாரி

சரி விடுங்க எந்த மாதிரி வேணும் சொல்லுங்க
இதுவரைக்கும் சன் மியுசிக் ல வராத மாதிரி இங்க இருக்குர ஃப்ரொடுசர்ஸ் இதுவரைக்கும் பண்ணாத ஐடியா வா இருக்கனும்

எனக்கு கொடுத்த ஃபர்ஸ்ட் வொர்க் சோ நல்லா பண்ணனும்
இந்த இயர் விஜய் ஓட 25 வது வருசம் சினிமா வாழ்க்கையில சோ அதயும் இதோட மெர்ஜ் பண்ணி ரெண்டுதுக்கும் ஒரெ வீடியோ ல வர ,மாதிரி பண்ணனும்
எல்லா படத்தோட இண்ட்ரோடக்சன் சீனயும் எடுத்து வச்சி டிஃப்ரண்டா இருக்கனும்
ஓகே பண்ணிடலாம் நீங்க ஃப்ரியா விடுங்க சஞ்சனா

சரி பண்ணுங்க நான் அப்புறம் வந்து பைனல் பாக்குரன்

என சொல்லிவிட்டு வெளியே கிளம்பினால் சஞ்சனா

சஞ்சனா வெளியே போனவுடன் ஒரு நிமிடம் யோசித்தான் ஜனா . லைஃப் ல இவ்வுளவு அழகான பொன்னு உன்கிட்ட வந்து பேசி இருக்கா ,இல்ல அழகா இருக்குர பொன்னுங்க கிட்ட நீதான் பேசி இருக்கியா , அதுக்கான சந்தர்ப்பம் தான் உனக்கு வந்து இருக்கா, ஏதோ அந்த குருவுக்கு இப்போதான் நீ இருக்குரது தெரிஞ்சி இருக்கு போல இத யுஸ் பன்னிக்குறது உன் கையில தான் இருக்கு

அவ இம்ப்ரெஸ் ஆகுர அளவுக்கு ஒரு மாஸப் பன்னிடு என நினைத்து கீ போர்டில் கை வைத்தவன் 6 மணி நேரமாக பார்த்து பார்த்து நல்ல நல்ல வீடியோக்களை எடுத்து டைம் லைனில் ரெடியாக வைத்து எடிட் செய்து கொண்டு இருந்தான்

டீம் லீடர் விக்கி திடிரென உள்ளே வந்து பார்த்த போது வேக வேகமாக எடிட் செய்து கொண்டு இருந்தான்

ஜனா என்ன பண்ணுரீங்க உங்கள ஷோ அப்சர்வ் தான பண்ண சொன்ன ஏன் வொர்க் ஆரம்பிச்சிங்க

இல்ல சார் அர்ஜெண்ட்னு சொன்னாங்க அதும் இல்லாம எல்லா எடிட்டரும் அவார்டு ஃபங்சன் ல பிசி சோ

சரி என்ன பண்ணி இருக்கிங்க காட்டுங்க என சொன்னதும் பண்ணது வரை போட்டு காட்டினான் வெல்டன் ஜனா நல்லா பண்ணி இருக்கிங்க

நீங்க பண்ணுர வீடியோ இண்டெர்நெட் ல வைரல் ஆகும் பாருங்க என சொல்லிவிட்டு வெளியே கிளம்பினார்

ஜனா ஃபுல் மாஸ்ப் வீடியோவையும் முடித்து அவுட் கொடுத்துவிட்டு இருக்க அடுத்த ஷிப்ட் க்கு எடிட்டர் வந்து விட அவரிடம் ஃபைனல் அவுட் முடிந்ததும் அப்புறம் வொர்க் பண்ணுங்க என அவரிடம் சொல்கிறான் அவரும் சரி என சொன்னதும் வெளியே வருகிறான் ஜனா

ஆபிஸ் முடித்து ரூமிற்க்கு போகும் வழியெல்லாம் சஞ்சனாவின் ஞாபகம்
ரூமிற்க்கும் வந்தான் அங்கு அவனது நண்பர்கள் கணகு கவின் ராஜேஷ் கோகுல் அனைவரும் இருந்தனர்

ஜனா யாரையும் கண்டு கொள்ளாமல் உள்ளே சென்றான்
நண்பர்கள் அனைவரும் ஹாலில் என்னடா இவன் ஃபர்ஸ்ட் டே வொர்க் போயிட்டு வந்து இருக்கான் எதும் பேசாம கம்முனு போறன்
உள்ளே போனவன் சும்மா இருக்காமல் உள்ளே இருந்த ஹோம் தியேட்டரில் வெரசா போகயில புதுசா போறவளேனு ஜில்லா படத்தில் உள்ள பாடலை போட்டான்

வெளியே இருந்த நண்பர்களும் சரி என்று அமைதியாக இருந்தனர் பிறகு திடிரென பாடலின் சத்தம் அதிகமாக கேட்டது

நண்பர்களுக்குள் என்னடா ஆச்சி இவனுக்கு என சொல்லிக்கொண்டு இருக்கும் போதே இன்னும் பாடலின் சத்தம் அதிகமானது

அப்போது கணகு மச்சான் அவனுக்கு என்னமோ ஆயிடுச்சு டா

சொல்லிக்கொண்டு இருக்கும் சமயம் திடிரென ’’இது நானா என்ன பழசெல்லாம் எங்க’’ என அந்த பாடலின் சரணம் வந்தது ஜனாவும் உள்ளே பாடிகொண்டு இருந்த்தான்

அப்போது ராஜேஷ் மச்சான் இவனுக்கு பைத்தியம் புடிச்சிடுச்சு போல டா

கவின் டேய் எல்லாரும் சைலண்ட் ஆ எழுந்த்து வாங்க டா என்ன தான்
பண்ணுரானு பாப்போம் என அவன் இருக்கும் ரூம் பக்கம் சென்றனர்

கோகுல் கதவை பொறுமையா திறக்கிறான் கதவை திறந்தது கூட தெரியாமல் பாடலை பாடிகொண்டு இருந்தான்.

ஜனா கதவின் எதிர்புறம் பார்த்துக்கொண்டு இருந்ததால் அவர்கள் பார்ப்பது அவனுக்கு தெரியவில்லை

உள்ளே இருந்த கண்ணாடியில் தனது முடியை கோதிவிட்டு கொண்டு பாடலை பாடிகொண்டு இருந்தான்

சிறிது நேரத்தில்’’ வெரசா போகயிலே லூசா ஆயிட்டானேனு’’ ஒரு நண்பர்கள் அனைவரும் கோரசாக பாடலை பாடியதும் அவன் திடிரென திரும்பி சிரித்தான்

ராஜேஷ் டேய் ஜனா என்னடா ஆச்சு என்ன திடிர்னு இப்படிலாம் பண்ணுர
கணகு என்ன மச்சான் சூப்பர் சிங்கர் டிரை பண்ண போறியா டா

கோகுல் பின்ன ஏன்டா இப்படி வந்ததும் இப்படி அலப்பற பண்ணுற

கவின் டேய் ஜனா அந்த பொண்ணு பேரு என்ன டா சொன்னதும் ஜனாவின் முகத்தில் பளிச்சென சந்தோசத்துடன்

சஞ்சனா

என சொல்கிறான்

அனைவரும் ஒரு செகண்ட் ஷாக் ஆகி பொண்ணா

அதற்குள் ராஜேஷ் டேய் ஒரு நாள் தான டா வேலைக்கு போன அதுக்குள்ள பொண்ணா இதுலாம் ரொம்ப ஓவர் டா

கணகு மச்சான் யாரு காலுலயாச்சும் விழுந்தாச்சும் பர்ஸ்ட் ஒரு வேலைக்கு போகனும் எத்தன நாளைக்கு தான் பசங்க மூஞ்சிய பாக்குரது

எங்க அப்பன் கிட்ட ஆயிரம் தடவ சொன்ன கோ எட் ல சேத்து விடுயானு எங்க கேட்டாரு

கோகுல் ஜனா மனசுல ஆசைய வளத்துக்காத அல்ரெடி ஆலு இருக்க போறான்

கவின் டேய் இங்க வா உக்காரு என்ன ஆச்சுனு தெளிவா சொல்லுடா’

ஜனா நடந்த்தை எல்லாம் விவரித்தான் அதற்கு கவின் நல்ல சான்ஸ் டா நாளைக்கு ஒழுங்கா தெளிவா பேசி உன் மாஸப்ஃ காட்டு

ராஜேஷ் டேய் டிரீட் வை டா ஜாப் கிடைச்சிடுச்சு ல அதும் இல்லாம சைட் வேற அடிக்குற

லவ் பண்ணி ஜாலியா இருக்க போற சோ கண்டிப்பா டிரீட் வைக்கனும்
லவ் ஒகே ஆனதும் கண்டிப்பா வைக்குறன் டா

நீ எப்போ ஃப்ப்ரொபோஸ் பண்ணி எப்போ டிரீட் வச்சி போடாங்

கோகுல் இன்னைக்கு மண்டே அடுத்த மன் டே நெக்ஸ்ட் மன் டே இங்க ஃபுல்லா சரக்கு இருக்கனும்

என்னடா சொல்லுற

நெக்ஸ்ட் மன் டே குள்ள லவ் அ சொல்லுர சொல்லி ஓகே பண்ணுர உனக்கு ஒரு வாரம் டைம் இல்ல அவ்வுலோ தான் நீ

ஜனா என்னது ஒன் வீக் ஆ டேய் என்ன்ங்கடா விளையாடுரீங்களா ஒரு வாரத்துல எப்படி டா லவ் அ சொல்லுவன்
டேய் எனக்கு அவகிட்ட எப்படி பேசனும்னு கூட தெரியாது டா

அதுலாம் இல்ல நீ பண்ணுர
அதற்க்குள்

கோகுல் ஆமா ஒரு வாரத்துகுள்ள நீ அவள ப்ரபோஸ் பண்ணி லவ் பண்ண வச்சிட்ட ராஜேஷ் உன்கிட்ட கொடுத்த 2000 கேக்கவே மாட்டான்

ராஜேஷ் ஷாக் ஆகி டேய் என்னது இது கோகுல் சும்மா என கண் அடிக்க சரி என ராஜேஷ் சரி டா நீ லவ் பண்ணி ஒகே பண்ணிட்ட அந்த 2000 நீயே வச்சிகோ டா
என சொன்னதும்

ஜனா டேய் காசு வேணாலும் இப்பவே ரெடி பண்ணி கொடுத்துடுரன் என்னால ஒரு வாரத்துல லாம் லவ் பண்ண வைக்க முடியாது டா பிலிஸ் விட்டுடுங்க டா

என சொல்லி ஆர்கிவ் பண்ணுறான் அதுலாம் முடியாது நீ லவ் பண்ணுற
இல்ல நாங்க உன் கிட்ட பேச மாட்டோம் என கணகு சொன்னதும்

ஜனா கணகை பார்த்து நீ அடி வாங்க போர டா இப்படி லாம் ஏத்தி விடுரதுக்கு

என்னால சத்தியமா முடியாது டா விடுங்கா டானும் சொல்லிவிட்டு போய் விடுகிறான்


செவ்வாய் ,
புதன் ,
வியாழன் ,
வெள்ளி, சனி
,ஞாயிறு

நாட்கள் ஓடின

ஞாயிற்று கிழமை கனகு ,கவின் ,ராஜேஷ் ,கோகுல் அனைவரும் ரூமில் பேசி கொண்டு இருப்பது

மச்சான் எங்க டா போறது
வெளியா எங்கயாச்சும் போலாம் டா

என சொல்லி கொண்டு இருக்கும் சமயம்
ராஜேஷ் க்கு போன் வருவது அதில் ஜனா என பெயர் வருவது

அட்டன் பண்ணியதும் டேய் எல்லாரும் வேளச்சேரி பீனிக்ஸ் மால் வாங்க டா

மூவி புக் பண்ணி இருக்கன் வந்து எனக்கு கால் பண்ணுன்ங்க

என சொன்னதும் அனைவரும் கிளம்பி பீனிக்ஸ் மால் உள்ளே செல்கின்றனர்

அங்கே லக்ஸ் சினிமா க்கு அனைவரும் வருகின்றனர்

வந்த்தும் கனகு டேய் எல்லாம் கொஞ்சம் அங்க பாருங்க டா என சொன்னதும் அனைவரும் பார்ப்பது

அங்கே ஜனா சஞ்சனாவுடம் உட்கார்ந்து சிரித்து பேசி கொண்டு இருப்பது
என்ன நடந்துச்சுனு தெரியாம அனைவரும் ஷாக் ஆகி இருக்க


நீங்களும் அப்படியே இருங்க இந்த ஒரு வாரத்துல ஜனா என்ன லாம் பண்ணானு சொல்லுரன்
(தொடரும்)

எழுதியவர் : அஷ்வின் தணிகை வேல் (25-Nov-17, 9:17 am)
பார்வை : 265

மேலே