வரம் கொடு
மலர்கள் உன் கன்னம் தொட்டு வண்ணம் பெற்றனவோ.. ?
நிலா உன் முகம் பார்த்து ஒளி வீச தொடங்கியதோ..?
குயில்கள் உன் குரல் கேட்டனவோ.. ?
மயிலினங்கள் உன் ஆடை பார்த்து தோகை செய்தனவோ..?
கடவுளுக்கும் வரம் கொடுத்தவளோ..?
வரம் கொடு எனக்கும் என் வாழ்நாளை உன்னுடன் கழிக்க.. !

