Gopalakrishnan Raman - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Gopalakrishnan Raman |
இடம் | : Erode |
பிறந்த தேதி | : 01-Dec-1989 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 20-Sep-2013 |
பார்த்தவர்கள் | : 160 |
புள்ளி | : 16 |
வார விடுமுறைக்கு வீட்டுக்கு வரேன்-னு சொன்னதும்..
வெள்ளிக்கிழமை விரதமுன்னாளும் மீனு, முட்டை எல்லாம் வாங்கி வைப்ப..!!
நூறு ரூவா மீன் துண்டுல முள் இருக்குன்னு ஓட்டல் கடைக்காரன் கிட்ட சத்தம் போட்டேன்..
மீனுக்கு முள் இருக்குமுன்னு அவன் சொல்லி தான் தெரிஞ்சுக் கிட்டேன்..!!
தூங்குறதுக்கு தலகாணி வேணுமுன்னு தனியா படுக்கையில தான் தெரிஞ்சுக் கிட்டேன்..
என்னதான் ரெண்டு கை இருந்தாலும் உன் பஞ்சு கையில தல வைச்சு தூங்குற சுகமே தனிதானே..!!
ரெண்டு மூணு செருப்ப தொலைச்சேன் பால்வாடி பள்ளிக் கூடத்துல..
நடக்குறதுக்கு செருப்பு வேணுமுன்னு உன் தோள்ல இருந்து எறங்கி நடந்தப்ப தான் தெரிஞ்சுக் கிட்டேன்..!!
ஒர
ஒத்தையடி பாதையிலே
ஒத்த செருப்பு கையிலே
ஒண்டிக்கட்டயாய் நடக்கயிலே
ஓலமிட்டு நாயி ஒன்னு
ஒத்த கைய கவ்விகிட்டு
கையா இல்ல செருப்பா-னு கேக்க
செருப்ப விட்டு செலதூரம் நடந்தேன்
சாயங்காலம் வந்துருச்சு
அம்மாவாச இருட்டிருச்சு
தண்ணிதர ஆளுமில்ல
தடுக்கிவிழுந்தா தூக்கிவிட யாருமில்ல
போங்கடா..
எதிர்த்து நிக்க எவனுமில்ல
எட்டுவச்சேன் தைரியமா...!
உறங்காத விழிகள்
விடியாத இரவுகள்
துளிர்விடும் உன் நினைவுகள்
மின்மினியின் வெளிச்சம் நிரந்தரமல்ல என தெரிந்ததும்
விடியலைத் தேடி நான் !
மேகங்களும் மோகம் கொள்ளும் உன் கருங்கூந்தல் வேண்டும் !
காதோர முனகலுக்கு காத்துக் கிடக்கும் உன் காதுமடல்கள் வேண்டும் !
மானினமும் மீனினமும் மயங்கும் உன் மைவிழிகள் வேண்டும் !
கொஞ்சிக் கிள்ள உன் பஞ்சுக் கன்னம் வேண்டும் !
கெஞ்சிக் கேட்க முத்தம் தர உன் செஞ்சாந்து உதடுகள் வேண்டும் !
பாசிமணிகளின் பாவம் தீர்க்கும் உன் சங்கு கழுத்து வேண்டும் !
நட்சத்திரக் காட்டில் நகர்வலம் செல்ல உன் நாட்டிய கால்கள் வேண்டும் !
மீண்டும் ஒரு குழந்தையாய் தவழ்ந்திட உன் மடி வேண்டும் !
என் ஆயுள்ரேகைக்கு நீளம் சேர்க்க என்னவளே நீ வேண்டும் !

கூதிர்கால மலையருவியில்
குறிஞ்சிமலர் சூடி
மயிலாட்டமாடும்
குறத்தியர் குலமகளோ !!
முன்பனிக்காலத்தில் சுனையருகே
சந்தனமரத்தில் வீற்று
கிள்ளை மொழி பேசியே
யாழிசைத்த மலையரசியோ !!
சிறுகுடியில் பிறந்து
வேங்கையுடனே
வேங்கை மலர்பறித்த
கொடிச்சியர் குலமகளோ !!
அன்றொருநாள் அகில்மர
நிழலிலே கண்ட
காந்தள் மலர்பூண்ட
காந்தவிழிக் கானவர் குலத்தவளோ !!
வேங்கைமர உச்சியிலே
தேனெடுக்கும் பொழுது
அங்கே கிழ்ங்ககழ்ந்த
வண்ணமயில் பெண்ணரசியோ !!
தைத்திங்களிலே
தினை, மலைநெல்
மூங்கிலரிசி கொண்டு
அமுதுபடைத்த வாலைக்குமாரியோ !!
அன்றேல்
கார்த்திகைத் திங்களிலே
கார்த்திகேயனுக்காய்
க
கண்டவுடன் நின்றது மான் குட்டி
என்னவளின் இன்னிசையில் இருள் தேவதை என்னை சூழ
நிலா மழையில் நனைந்தேன்
நடந்தேன் வெகுதூரம்
விடியலோ வந்தது - கேட்டேன்
எங்கே எனது கவிதை ?
இது கவிதையின் தேடலா இல்லை
கவிதைக்குரியவளின் தேடலா ?
விளங்கவில்லை எனக்கு
ஒருவேளை பைத்தியம் பிடித்ததோ
காத்திருக்கிறேன் அடுத்த இரவுக்கு... !