கனவிலே ஒரு கவிதை

கண்டவுடன் நின்றது மான் குட்டி
என்னவளின் இன்னிசையில் இருள் தேவதை என்னை சூழ
நிலா மழையில் நனைந்தேன்
நடந்தேன் வெகுதூரம்
விடியலோ வந்தது - கேட்டேன்
எங்கே எனது கவிதை ?
இது கவிதையின் தேடலா இல்லை
கவிதைக்குரியவளின் தேடலா ?
விளங்கவில்லை எனக்கு
ஒருவேளை பைத்தியம் பிடித்ததோ
காத்திருக்கிறேன் அடுத்த இரவுக்கு... !

எழுதியவர் : கோபாலகிருஷ்ணன் ராமன் (20-Sep-13, 12:14 pm)
பார்வை : 139

மேலே