அப்பாவுக்கு

வார விடுமுறைக்கு வீட்டுக்கு வரேன்-னு சொன்னதும்..
வெள்ளிக்கிழமை விரதமுன்னாளும் மீனு, முட்டை எல்லாம் வாங்கி வைப்ப..!!

நூறு ரூவா மீன் துண்டுல முள் இருக்குன்னு ஓட்டல் கடைக்காரன் கிட்ட சத்தம் போட்டேன்..
மீனுக்கு முள் இருக்குமுன்னு அவன் சொல்லி தான் தெரிஞ்சுக் கிட்டேன்..!!

தூங்குறதுக்கு தலகாணி வேணுமுன்னு தனியா படுக்கையில தான் தெரிஞ்சுக் கிட்டேன்..
என்னதான் ரெண்டு கை இருந்தாலும் உன் பஞ்சு கையில தல வைச்சு தூங்குற சுகமே தனிதானே..!!

ரெண்டு மூணு செருப்ப தொலைச்சேன் பால்வாடி பள்ளிக் கூடத்துல..
நடக்குறதுக்கு செருப்பு வேணுமுன்னு உன் தோள்ல இருந்து எறங்கி நடந்தப்ப தான் தெரிஞ்சுக் கிட்டேன்..!!

ஒரு நாள் ரெண்டு நாள் இல்ல ஒவ்வொரு நாளும்..
ஓராயிரம் மிஸ்டுகால் ஆனாலும் கோவப்படாம அடுத்த முறை கால் வரும்..
பொறுமை-னா என்னன்னு கொஞ்ச நஞ்சம் கத்துக்கிட்டேன் உங்ககிட்ட..!!

எக்கச்சக்க பாசமெல்லாம் எம் புள்ளைக்கு கொடுப்பேனான்னு இந்த புள்ள மனசுக்கு தெரியல..
பெத்த மனம் பித்து புள்ள மனம் கல்லுங்றது சரியாத்தான் போச்சு..!!

கல்லுங் கரையும் காலம் வந்தாச்சு..
எம் புள்ளை-னு பெருமையா சொல்ல வப்பேன் காலம் வரை..
வேறென்ன கைம்மாறு செய்ய போறேன் அப்பாவுக்கு.. !!

எழுதியவர் : கோபாலகிருஷ்ணன் ராமன் (21-Dec-17, 6:16 pm)
Tanglish : appavukku
பார்வை : 160

மேலே