kajany - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : kajany |
இடம் | : Jaffna in Srilanka |
பிறந்த தேதி | : 03-May-1983 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 03-Sep-2011 |
பார்த்தவர்கள் | : 411 |
புள்ளி | : 64 |
I like to write Kavithai
திருமுனிவர் குறள்பற்றி திகட்டாத தமிழ்ப்போற்றி – இப்
பெருவெளியில் உழல்கின்ற பிறமொழிகள் பின்தள்ளி
உருவாக்கு உன்னாக்கம் உலகோர்க்குப் புத்தூக்கம் – தரும்
எருவாக்கு, கருவாக்கு இணையற்றத் தமிழோடு !
வீறுதமிழ் பாவலனாம் பாரதியின் வீரமேற்றிப் – பெரு
ஊறுதரும் யாவரையும் “தீ”மொழியால் சுட்டெரிக்க
ஈறுஎல்லை இல்லாத வீரத்தமிழ் பாட்டெழுதி – அரும்
பேறுபுகழ் நிலைத்தோங்கப் பாட்டோடு பாடுபடு !
படர்கின்ற தமிழ்க்கொடியில் மலர்கின்ற கவிப்பூக்கள் - பல
இடர்நீக்கும் மருந்தாக தினமிங்கு வரவேண்டும் !
தொடர்கின்ற துயரங்கள் துவம்சிக்கும் திறத்தோடு – பெரும்
கடலொத்த தமிழோடு தினந்தோறும் கவிப்பாடு !
விழிக்கெட
மண்ணில் தவழும் என் மடி மீன்
பெண்ணில் பிறப்பெடுத்த ஒரு துளி வான் !
கருவில் உதித்த இந்த அரும் உறவால்
கணங்கள் செழித்துக் கொழிக்கும் தினம் அழகால் !
கொஞ்சும் மழலை உறிஞ்ச தாய் முலையை
விஞ்சும் விண்ணில் பொழியும் பெரும் மழையை !
மாரி மழையோ பாரில் பயிர் வளர்க்கும்
மாரில் சுரக்கும் தாய்ப்பால் உயிர் கொடுக்கும் !
விடியலைத் தேடி விரல்நுனி தேய
கவிதைகள் செய்கின்றோம் – சிறு
செடியினைக் கூட வளர்க்கா எழுத்தில்
செழிப்பைத் தேடுகிறோம் !
எழுபதைக் கடந்தும் ஏரினை இழுத்தவர்
எலிக்கறி தின்கின்றார் – நாம்
உழுவதை மறந்து உழுபடை துறந்து
எழுத்துகள் செய்கின்றோம் !
ரவைகள் துளைத்து ரத்தம் வடித்த
ரணகளம் காயவில்லை – பெரும்
அவைகள் அதிரும் சூளுரை மட்டும்
இன்னும் ஓயவில்லை !
பற்பல சாதிகள் பாரினில் வளர்த்து
பங்கம் செய்கின்றோம் ! – பின்
பொற்கிழி வாங்கிட சாதிகள் எதிர்த்து
சங்கம் செய்கின்றோம் !
ஊரினில் ஒருவன் ஊழல் செய்தால்
ஊமையாய்ப் போகின்றோம் – பின்
வீரியம் தெறிக்கும் வார்தைகள் சொருகி
வேதம் ஓத
குருவி கொத்தி
விட்டுப் போன பழத்தில்
சுதந்திர புழுக்கள் !
=====
வற்றிய குளம்
வந்து வந்து போகும்
மீன் கொத்தி !
=====
தேக்கு மரக்காடு
அலகொடிந்துக் கீச்சிடும்
மரங்கொத்தி !
=====
வாய் திறந்தால்
பொய்யே பேசுகிறது
சோதிடக் கிளி !
=====
காய்ந்த மரம்
இலைகளின் சலசலப்பின்றி
பறவைக் கூடு !