நீ வேண்டும்
மேகங்களும் மோகம் கொள்ளும் உன் கருங்கூந்தல் வேண்டும் !
காதோர முனகலுக்கு காத்துக் கிடக்கும் உன் காதுமடல்கள் வேண்டும் !
மானினமும் மீனினமும் மயங்கும் உன் மைவிழிகள் வேண்டும் !
கொஞ்சிக் கிள்ள உன் பஞ்சுக் கன்னம் வேண்டும் !
கெஞ்சிக் கேட்க முத்தம் தர உன் செஞ்சாந்து உதடுகள் வேண்டும் !
பாசிமணிகளின் பாவம் தீர்க்கும் உன் சங்கு கழுத்து வேண்டும் !
நட்சத்திரக் காட்டில் நகர்வலம் செல்ல உன் நாட்டிய கால்கள் வேண்டும் !
மீண்டும் ஒரு குழந்தையாய் தவழ்ந்திட உன் மடி வேண்டும் !
என் ஆயுள்ரேகைக்கு நீளம் சேர்க்க என்னவளே நீ வேண்டும் !