தமிழ்

கவிதையே
உன்னை எழுதி எழுதி
எழுத்து .காமில்
பதிவு செய்கிறேன்
பார்ப்பவர்கள் சிலர் மட்டும்
கண்கள் இல்லை
என்பதால் அல்ல
என் காதல் புரியவில்லை
கவிதையே
காதலில்
நான் பெற்ற
முதல் குழந்தை
நீ ....
என்னவள்
உன் தாய்
கவிதையே
பல ஆங்கிலேய அறிவு ஜீவிகள்
எழுத்துக்களில்
உன்னை பார்த்தேன்
உன் அழகு தெரியவில்லை
அகத்தியனுக்கு - தொல்காப்பியனும்
கம்பனும் - கண்ணதாசனும்
பாரதியும் - பாரதிதாசனும்
வாலியும் - வைரமுத்து
அப்துல் ரகுமானும் - அறிவுமதியும்
சிற்பியும் - ஸ்ரீனிவாச ராகவனும்
சேர்ந்து சேர்த்த
வார்த்தைகளின் உருவில்
எழுந்த கவிதையாய்
அவள்.....
அவளை எனக்கு
காட்டிய கவியே
கவிக்கு பிறந்தவளே
நான் பெற்ற
முதல் குழந்தை
நீ.....
என்னவள் உன் தாய்
உன் தாயின் பெயர்
தமிழ் ....