அற்றைத் திங்கள்

அழகிய கிராமம் அது
பச்சை சேலை
உடுத்திய பூமித்தாய்
வயலெங்கும் நீர் நிலைகள்
கெண்டை குஞ்சுகளின் துள்ளல்கள்
பருவம் தவறாத மாரி
வெள்ளந்தி மனிதர்கள்
மகிழ்ந்து வாழ்ந்த கால்நடைகள்...

கால்கடுக்க பள்ளிக்கு
நடந்துச்சென்ற காலங்கள்
குறும்பும் கும்மாளமும்
சிறு சிறு சண்டைகளும்
பசுமை நிறைந்த அழகிய
நிலாக்காலம் அது...

ஒரு இனம்புரியாத ஈர்ப்பு
ஆசைகளின் இன்ப கோர்ப்பு
அவளை பார்க்கும் நொடிகள்
மனதுக்குள் மழைச்சாரல்
அவளுடன் பேசும் நொடிகள்
மனதுக்குள் இன்பச்சாரல்...

புதிதாக அவளே அறிந்திராத
அந்த நாட்கள் நிகழ்ந்தப்போது
அதை சொல்லத்தெரியாமல்
அவள் கலங்கிய நொடிகள்
என் மனதுக்குள் ஆயிரம் இடிகள்...

பெரியவளாகிவிட்டாள்
போதும் பள்ளிப்படிப்பு
மாமனுக்கு கழுத்தை நீட்ட
சம்சார வளையத்துக்குள் அவள்
குழந்தை மனம் மாறத
அவளுக்கும் ஒரு குழந்தை...

வருடங்கள் உருண்டோடின
ஒரு திருமண நிகழ்ச்சியில்
அவளை கண்டேன்
நலம் விசாரித்தாள்
எதோ இழந்ததை போல்
என் மனதுக்குள் ஒரு சோகம்
செல்வா என்றாள் அதிர்ந்து
திரும்பினேன்
அவளின் மகன் என்னம்மா
என்று ஓடினான்...

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ்... (12-Dec-17, 10:23 am)
Tanglish : atraith thingal
பார்வை : 568

மேலே