உதிர்கின்ற இலைகளே
உதிர்கின்ற இலைகளே
ஒரு நிமிடம் நில்லுங்கள்
வேராக விழுதாக மண்ணிலே
பல காலம் வாழ்ந்தீர்கள்..
மழையிலும்
வெயிலிலும்
மனதோடு இணைந்தீர்கள்
மாசற்ற காற்றினை
சுவாசிக்க தந்தீர்கள்..
மழலைக்கு விளையாட
மலர்களைத்தான் கொடுத்தீர்கள்..
மனிதருக்கு பசி போக்க
காய் கனிகளைத்தான் தந்தீர்கள்..
காக்கை குருவிக்கு
இருப்பிடமானீர்கள்...
கடமையை முடித்துவிட்டு
உதிர்ந்து போகும் இலைகளே..
துப்புரவு தொழிலாளருக்கு
குப்பையாகவும்..
இல்லத்தரசிக்கு விறகாகவும்
கவிஞனுக்கு கவிதையாகவும்
காட்சிக்கு அழகாகவும்
கவிதைக்கு பல பொருள் தந்து
புவியைத்தான் மலரச் செய்தீர்கள்..
உதிரும் காலம் வந்தது
உவகையோடு ஏற்றுக்கொண்டீர்..
இலையுதிர் காலமிது
உதிர்ந்து விட்டேன்..
வசந்த காலத்திலே மீண்டும்
உயிர் பெற்று வருவேன் என
சொல்லாமல் சொல்லிச் சென்றது
உதிர்ந்த இலைகள்..
உரமாக மண்ணில்
உறுதியோடு உலவுவேன் என
உண்மையை சொன்னது
உதிர்ந்த இலைகள்..